பாகுபலி சீரியலில் எஸ்.எஸ். ராஜமவுலி டைரக்டு செய்த இரண்டு படங்களும் வசூல் சாதனை செய்ததால், அவரின் அடுத்த படமான ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜுனியர் என்.டி.ஆர்.- ராம்சரண் ஹீரோக்களாக நடித்துள்ள இந்த படம் அக்டோபர் மாதம் 13ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய, இந்த படத்தை வாங்க கடும் போட்டி ஏற்பட்டது.
‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் வெளிநாட்டு உரிமை 70 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது.
இந்தியில் கமிஷன் அடிப்படையில் இந்த படத்தை ஏ.ஏ.பிலிம்ஸ் வாங்கியுள்ளது. இதன் மூலம் தயாரிப்பாளருக்கு நூறு கோடி ரூபாய் கிடைக்கும்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு தென் மொழிகளில் இந்த படத்தை வாங்க மொத்தமாக 348 கோடி ரூபாய் கொடுக்க அந்தந்த ஏரியா விநியோகஸ்தர்கள் முன் வந்துள்ளனர்.
இரண்டொரு நாளில் ஒப்பந்தம் கையெழுத்தாகும், படம் ரிலீஸ் ஆகும் முன்பே தியேட்டர்களில் ரிலீஸ் செய்யும் உரிமை 500 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை ஆகி இருப்பது சாதனை என கருதப்படுகிறது.
இது தவிர டி.வி. உரிமை, ஓ.டி.டி. தளங்களின் உரிமை போன்ற பல்வேறு தளங்களில் இருந்தும், பணம் கொட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
– பா. பாரதி