![]()
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் ஒருவர் புகார் கொடுத்ததன் பெயரில், அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் .
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா (45 ), பெண்களை வைத்து ஆபாச படங்களை உருவாக்கி… அதனை அவரது செயலியில் வெளியிட்டு வந்துள்ளார். இது குறித்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இவர் மீது, ஐபிசி பிரிவுகள் 420 (மோசடி), 34 (பொது நோக்கம்), 292 மற்றும் 293 (ஆபாசமான மற்றும் அநாகரீகமான விளம்பரங்கள் மற்றும் காட்சிகள் வெளியிட்டது), மற்றும் ஐடி சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகள் மற்றும் பெண்களின் அநாகரிக பிரதிநிதித்துவம் (தடை) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை குந்த்ரா மும்பை காவல்துறையின் குற்றபிரிவு அதிகாரிகளால் ஜே.ஜே மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் அவர் மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

[youtube-feed feed=1]