பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் ரைசா வில்சன். இவர் தமிழில் வேலையில்லா பட்டதாரி 2ல் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை ரைசாவின் முகத்தில் பேசியல் செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கண்ணுக்கு கீழ் வீங்கி பாதிப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து ரூ. 1 கோடி நஷ்டஈடு கேட்டு தனது வழக்கறிஞர் மூலம் டாக்டர் பைரவி செந்திலுக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் சிகிச்சைக்கு ஒப்புக்கொள்வதாகத் தானாக முன்வந்து ரைசா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார், எனவே தன்னிடம் மூன்று நாட்களில் ரைசா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டாக்டர் பைரவி ரைசாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இருவரும் மாறி மாறி குறை கூறி வந்த நிலையில், தற்போது ரைசா, ட்விட்டரில் அவரது புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவரது கண்ணுக்கு கீழ் இருந்த வீக்கம் முற்றிலும் குணமடைந்துள்ளது.
Hey 🙋🏻♀️ pic.twitter.com/Z6xbFYtCEH
— Raiza (@raizawilson) May 18, 2021