சென்னை: தீபாவளிக்குள் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஆனால், இயற்கையை கட்டுப்படுத்த முடியாது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் கடந்த சில மாதங்களாக மழைநீர் வடிகால் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் அவை முழுமை பெறாமல் ஆங்காங்கே பாதியில் நிற்கிறது.சென்னை முழுவதும் மழைநீர் வடிகால் பணிகள், கால்வாய் பணிகள், கழிவுநீர் கால்வாய் பணிகள், மெட்ரோ ரயில் பணிகள் என பல பணிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் கடுமையான துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
அதுவும் மழை நேரங்களில் சொல்லொனா துயரங்களுக்கு ஆளாவதுடன், கடுமையான போக்குவரத்து நெரிசளும் ஏற்பட்டு வருகிறது. ஆனால், தமிழக முதல்வர் முதல் அமைச்ச்ரகள், அதிகாரிகள் வரை அனைவரும் மழை காலத்திற்குள் பணிகள் முடிவடைந்து விடும் என கூறி வருகின்றனர். ஆனால், இழை காலம் தொடங்கி உள்ள நிலையில், தற்போது பெய்து வரும் சிறுசிறு மழைகளுக்கே பல இடங்கள் சேரும் சகதியுமாக மாறி, மக்களின் அன்றாட வாழ்வை நிலைகுலையை வைத்துள்ளது.
மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்ட உள்ளது. அதை சண்காணிக்க அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து, அவர்கள் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு , அவ்வப்போது சென்று ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் தனித்தனியாக ஆய்வு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், நேற்று இரவு அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுடன் சென்னை மாநகரில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களை நேரில் சென்ற பார்வையிட்டார். சென்னையின் வால்டக்ஸ் சாலையில் உள்ள மழைநீர் வடிகால் பணிகளை அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துபோது, மின்சார இணைப்புகள், குடிநீர் இணைப்புகள் என பூமிக்கு அடியில் பல்வேறு இணைப்புகள் உள்ளது. இவற்றை சரிசெய்துகொண்டே, மழைநீர் வடிகால் பணிகளை செய்ய வேண்டிய நிலை உள்ளது. பகல் நேரங்களில் வால்டாக்ஸ் சாலையில் ஆய்வு செய்ய முடியாது. அதனால் தான் இரவு நேரங்களில் ஆய்வு செய்யப்படுகிறது.
தீபாவளிக்குள் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க ஒப்பந்தத்தாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். பொறியாளர்களும் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதனால் மழை வருவதற்கு முன் மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் முடியும் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்கள் தீபாவளிக்கு இன்னும் இரண்டுநாள்தான் உள்ளது, அதற்குள் அனைத்து பணிகளும் நிறைவு பெறுமா என்ற கேள்விக்கு, தீபாவளிக்கும் அனைத்து பணிகளையும் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்காக தான் இரவு நேரங்களிலும் பணிகளை பார்வையிட்டு வருகிறோம். அமைச்சரே நேரடியாக பணிகளை வந்து பார்க்கிறபோது, பணிகளை வேகமாக முடிக்க வேண்டும் என்று உற்சாகம் ஊழியர்களுக்கு கிடைக்கும். ஆய்வு என்ற பெயரில் இரண்டு இடங்களில் பார்த்து செல்வதற்காக வரவில்லை. தீபாவளிக்கும் முன் முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் இயற்கையை கட்டுப்படுத்த முடியாது என்று தெரிவித்தார்.