சென்னை அதன் சுற்றுப்புற வட்டாரங்களில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை மிதமானதுமுதல் கனமழை மழை பெய்தது. தற்போதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிற. இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
நள்ளிரவு முதல்,சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. வடபழனி, கோடம்பாக்கம், அசோக்நகர், கிண்டி, அடையார், திருவான்மியூர், சோழிங்கநல்லூர், கோயம்பேடு, மாதவரம், பெரம்பூர், செங்குன்றம், புழல், சோழவரம், பொன்னேரி, கும்மிடிபூண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை தொடர்ந்துவிட்டு விட்டு பெய்து வருகிறது.
இந்த நிலையில், வெப்பச்சலனம் காரணமாக 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும்,
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 50 முதல் 60கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் வியாழக்கிழமை வரை மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது