சென்னை,

மிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வெப்ப சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது,

வெப்பச் சலனத்தின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில்   9 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் பதிவானது.

அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 103 டிகிரி வெயில் பதிவானது.

அதேபோல் நேற்று பல இடங்களில் மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக  கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சின்னக்கல்லாறில் 20 மி.மீ., மழை பதிவானது.

நத்தம், திருவையாறு, பொள்ளாச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

இவ்வாறு வானிலை மையம் தெரிவித்து உள்ளது.