சென்னை

சென்னையில் கனமழை காரணமாக பிரதான சாலைகளில் நீர் அதிக அளவில் தேங்கி உள்ளது,.

வட கிழக்கு பருவமழையா; தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.சென்னை வானிலை ஆய்வு மையம்  தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி வரை கனமழை தொடரும் என்று தெரிவித்து உள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னையில் மழை பெய்துவருகிறது. நேற்று சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று தொடர்ந்து மழை பெய்ததன்காரணமாக சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

சென்னையில் கோயம்பேடு மெட்ரோ பாலத்தின் கீழ் முழங்கால் அளவு நீர் தேங்கியுள்ளது. மேலும் கோயம்பேடு மார்க்கெட் செல்லக்கூடிய பிரதான சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால், மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்., அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோயம்பேடு மெட்ரோ பாலத்தின் கீழ் தேங்கியுள்ள மழைநீரை அகற்றவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதைத்தவிர சென்னை எழும்பூர் லாங்ஸ் கார்டன் சாலை, ராயப்பேட்டை ஜிபி சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் தேங்கி உள்ளதால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.