கோவை

நீலகிரியில் பெய்து வரும் கனமழை காரணமாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகமண்டலம் வரை நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.  மலைகள் மற்றும் இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிக்க இந்த மலை ரயில் மிகவும் உகந்தது ஆகும்.

எனவே இந்த மலை ரயிலில் பயணம் செய்து அங்குள்ள இயற்கை சூழலைக் கண்டு ரசிக்கச் சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கனமழை காரணமாக கல்லார் முதல் அடர்லி வரை மலைப்பாதையில் மரங்கள் விழுந்து மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவு காரணமாக நீலகிரி மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.