சென்னை
சென்னை புறநகர பகுதியான ஆவடி மாநகராட்சியில் ரூ.1.35 கோடி செலவில் மழைநீர் கால்வாய்ப்பணிகளை அமைச்சர் சா மு நாசர் தொடங்கி வைத்துள்ளார்.
தமிழக கிராம ஊராட்சிகளில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் நடைமுறையில் உள்ளது. திமுக ஆட்சி அமைத்த பிறகு, இந்த திட்டம் நகர்ப்புறங்களிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி தமிழக அரசின் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டான பிருந்தாவன நகர், 1வது குறிக்குத்தெரு மற்றும் மசூதி தெரு ஆகிய இடங்களில் மழைநீர் கால்வாய் அமைக்க முதற்கட்டமாக முடிவு செய்யப்பட்டது
நேற்று. இப்பணியை ஆவடி தொகுதி எம்எல்ஏவும், பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் தொடங்கி வைத்தார். இந்tஹ நிகழ்ச்சியில் ஆவடி மாநகர மேயர் ஜி.உதயகுமார், துணை மேயர் எஸ்.சூரியகுமார், மாநகராட்சி ஆணையர் சரஸ்வதி, பொறியாளர் மனோகரன், உதவி பொறியாளர் சத்தியசீலன், திமுக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் கே.ஜெ.ரமேஷ், பதாகை வீ.சிங்காரம், ஆவடி மாநகர செயலாளர்கள் ஜி.ராஜேந்திரன், பேபி சேகர், ஜி.நாராயணபிரசாத், பொன்.விஜயன், உள்படப் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது அமைச்சர்,
”நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆவடி மாநகராட்சியில் மண்டலம் 3 மற்றும் 6ல் ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் 9 மழைநீர் கால்வாய் பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி 5வது வார்டில் 210 மீட்டாருக்கு மழைநீர் கால்வாய் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 2400 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ரூ.382 ஊதியம் இவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் ஆவடி மாநகராட்சி பகுதிகளில் அடுத்தடுத்து, 8 இடங்களில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற உள்ளது. இதன் மூலம், வருங்காலத்தில் ஆவடி பகுதிகளில் தெருக்கள், வீடுகளைச் சுற்றி மழைநீர் தேங்காமல், தங்கு தடையின்றி கால்வாய்களில் சென்றுவிடும்”
எனத் தெரிவித்துள்ளார்.