மழை நிவாரண பணிகள்: சென்னைக்கு 15 அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் உத்தரவு

Must read

சென்னை,

டகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும்  நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர் மற்றும் அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் 15 அமைச்சர்களை நியமித்தும் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தற்போது பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் சென்னை மற்றும் ஒருசில மாவட்டங்களில்  கனமழை பெய்து வருகிறது.

இந்தநிலையில், பருவமழை பாதிப்புகள் குறித்து மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதையடுத்து  நிவாரண பணிகளை மேற்கொள்ள  அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு அமைச்சரை நியமித்தும் அவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

கடலோர மாவட்டங்களில் 115 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மழைநீர் புகாத வண்ணம் மின் பகிர்மான பெட்டிகளை நல்லமுறையில் பராமரித்து, உயரத்தில் அமைக்கவும்,   மழை பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்தி தொற்று நோய் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

More articles

Latest article