சென்னை

ன்று தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் நேற்று முன் தினம் இரவில் இருந்தே நல்ல மழை பெய்து வந்தது.  தலைநகர் சென்னையில் நேற்று மதியம் சற்று வெயில் அடித்த நிலையில் இரவில் மீண்டும் பல பகுதிகளில்  மழை பெய்துள்ளது.  இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

அப்போது அவர், “இன்று (செப்.23-ம் தேதி) கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், மேலும் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன்மிதமான மழையும் பெய்யும்.

தலைநகர் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.  சென்னையில்பரவலாக இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்.” என தெரிவித்துள்ளார்.