சென்னை
சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேர்த்திக்குத் தமிழகத்தின் 36 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் தென் தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி காரணமாக இன்று முதல் 20-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்து இருந்தது.
தற்போது தமிழகத்தின் 36 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விழுப்புரம், வேலூர், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர், கோவை, திருப்பூர், தேனி, ராமநாதபுரம், நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.