வறட்சியால் தவிக்கும் தமிழகத்தில் வரும் ஜனவரி 20 முதல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதால், தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் விவசாயம் கடுமையாக பாதித்துள்ளது.
இந்த நிலையில் தாய்லாந்து அருகே புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி மேற்கு திசையில் நகர்ந்து வருவதாகவும் இதனால், வரும் ஜனவரி 20-ம் தேதி முதல் 26-ம் தேதிக்கு உட்பட்ட நாட்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
முதலில் கடலோர மாவட்டங்களில் தொடங்கும் மழை, பின்னர் படிப்படியாக உள் மாவட்டங்களில் பெய்யத் தொடங்கும் என்றும், இந்த மழை தமிழகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து செல்லக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.