சென்னை,

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செய்யாறில் 5 சென்டி மீட்டர் மழையும், நாகப்பட்டினம், ஆடுதுறை, குடவாசல் பகுதிகளில் தலா 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையில் அதிகப்பட்சமாக 36 டிகிரி செல்சியஸ், குறைந்த பட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.