சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு பெய்யும் மழை பெய்து வருகிறது. பெருங்களத்தூரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்,  இன்றுபிற்பகல் 17 மாவங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளான மாங்காடு, பூந்தமல்லி, போருர் சோழவரம் சோழிங்கநல்லூர் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. அதுபோல  சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. கந்தன்சாவடி, தாம்பரம், வேளச்சேரி, அடையாறு, , அண்ணா சாலை, மயிலாப்பூர், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வண்ணாரப்பேட்டை, குரோம்பேட்டை,மடிப்பாக்கம், கோயம்பேடு, வடபழனி, அண்ணாநகர், பாரிமுனை, திருவொற்றியூர், மாதவரம், பெரம்பூர் உள்பட பல பல பகுதிகளில் விட்டு விட்டு  மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பெருங்களத்தூரில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை வரும் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்பட தமிழகத்தின் 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சமீபத்தில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்து கரையை தொடர்ந்து. இன்று முதல் 15 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியின் பல பகுதிகளின் பல பகுதிகளில் தொடர் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக , தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.