புதுச்சேரி: மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி மாநிலத்தில், மஞ்சள் நிற குடும்ப அட்டை வைத்துள்ளவர்களுக்கும் ரூ.5000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்து உள்ளார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழகத்தைப்போல புதுச்சேரி மாநிலமும் கடுமயாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. மழையால் பலரின் வீடுகள் சேதமடைந்தன. பயிர்கள் நாசமாகின. பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சென்று மழை பாதிப்புகளை ஆய்வு செய்த முதலமைச்சர் ரங்கசாமி, பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும், பாதிப்பு நிவாரணம் வழதுங்கப்படும் என்றும்அறிவித்தார்.  இதையடுத்து, அங்கு ஏற்பட்ட மழை வெள்ளப் பாதிப்புகளை மத்தியஅரசு நேரில் சென்று ஆய்வு நடத்தியது.

முன்னதாக மழை வெள்ளத்தால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர்  ரங்கசாமி அறிவித்தார். அதன்படி,  அதேபோல வெள்ளத்தில் பயிர் மூழ்கியிருந்தால் விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்ருக்கு ரூ.20 ஆயிரமும், சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.25 ஆயிரமும் நிவாரணம் அளிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

பின்னர் மற்ற தரப்பினர் கோரிக்கையை ஏற்று, தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், மீனவர்களுக்கு ரூ.5 ஆயிரம் மழை நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார். பின்னர்,   சிவப்பு நிற ரேஷன்கார்டு வைத்துள்ள 30 ஆயிரம் பேருக்கும் ரூ.5 ஆயிரம் மழை நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

இதையடுத்து,  இதையடுத்து விவசாய கூலிகள், வீட்டு வேலை செய்வோர், அன்றாட உடல் உழைப்பு தொழிலாளர்கள் என அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் மழை நிவாரணம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும்  வலியுறுத்தின. அத்துடன், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களான மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கும் நிவாரணம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, தற்போது,  அவர்களுக்கும் ரூ. 5,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.