சென்னை

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்து வருகிறது.   இது விரைவில் புயலாக உருவாகலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்த புயலுக்கு மொக்கா என பெயரிடப்பட்டுள்ளது.   இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று மாலை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில்,

தென்காசி , திருநெல்வேலி , கன்னியாகுமரி , தேனி , விருதுநகர் , திண்டுக்கல் , நீலகிரி , திருப்பூர், ஈரோடு , கோவை , திருப்பத்தூர் , கிருஷ்ணகிரி , விழுப்புரம் , கள்ளக்குறிச்சி , கடலூர் , மயிலாடுதுறை , சேலம் , அரியலூர் , நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது” 

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.