சென்னை:

யணிகளை ரயிலேயே தனிமைப்படுத்த வசதி ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரயில்வே துறை அமைச்சகத்திடம் கேட்டு கொண்டுள்ளார்.

தமிழகத்தில் நேற்று மட்டும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து  227-ஆக மாநிலத்தில் உயர்ந்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் இருந்து 1,500 பயணிகள் சிறப்பு ரயில் மூலம் இன்றிரவு  சென்னை வர உள்ளனர். இதையடுத்து,  பயணிகளுக்கு ரயிலிலேயே தனிமைப்படுத்து வசதி ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரயில்வே துறை அமைச்சகத்திடம் கேட்டு கொண்டுள்ளார்.

ஏற்கனவே,  பிரதமர் மோடியுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் 31-ஆம் தேதி வரை விமானம் மற்றும் ரயில் சேவைகளை நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதை தவிர்த்து, தமிழகத்திற்கு ரயில்களில் வரும் பயணிகளை ரயிலிலேயே சோதனை செய்யவும், தனிமைப்படுத்தவும் வசதிகள் செய்ய வேண்டும் என்று ரயில்வே துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.


இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சகத்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் வரை சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் ரயில்களை இயக்க வேண்டாம். சென்னைக்கு டெல்லியில் இருந்து இயக்கப்படும் ராஜ்தானி ரயில் பெட்டி குளிர்சாதன வசதி கொண்டது. சென்னைக்கு வரும் பயணிகளை பி.சி.ஆர். பரிசோதனைக்கு பின்னரே தமிழகத்திற்குள் அனுப்ப முடியும். அந்த பயணிகளை  ரயிலிலேயே சோதனை செய்யவும்,  தனிமைப்படுத்தவும் ரயில்வே துறை வசதி செய்து கொடுக்க வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி கோரிக்கை விடுத்துள்ளார்.

முதலமைச்சரின் கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்ட அறிக்கையில்,  பயணிகளை கட்டாய ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை எம்ஹெச்ஏ பரிந்துரைக்கவில்லை என்றும்,  ரயில்வே உள்கட்டமைப்பு மக்களை கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளதால், நீங்கள் பரிந்துரைத்துள்ளது போன்று தனிமைப்படுத்தல் மற்றும் பிற நடவடிக்கைகளை எங்களால் மேற்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மாநிலத்திற்கு வரும் பயணிகளை மத்திய உள்துறை அமைச்சக  வழிகாட்டுதல்களின்படி மாநில அரசுகளே கையாள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதையடுத்து, சிறப்பு ரயில்கள் மூலம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்தி வைக்க தேவையான ஏற்பாடுகளை சென்னை கார்ப்பரேஷன் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து சென்னை கார்ப்பரேஷனின் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,   ஒரு நாளில்  1,500 பேருக்கு சோதனை நடத்துவது எளிதான ஒன்று அல்ல. இருப்பினும் போதுமான ஏற்பாடுகளைச் செய்ய ரயில்வே அதிகாரிகளுடன் நாங்கள் ஆலோசித்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.