கோயம்முத்தூர்,

கோயமுத்தூரின் அடையாளமாக ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் படத்தை தென்னக ரெயில்வே அறிமுகப்படுத்தியிருந்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து அந்த படம் அகற்றப்பட்டது.

கடந்த 10ந்தேதி  திடீரென  கோவை – சென்னை சேரன் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில், கோவையின் அடையாளமாக ஈஷா யோக மையத்தின் படம் ஒட்டப்பட்டது. இது சர்ச்சையை கிளப்பியது.

பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள ஈஷா யோகா நிறுவனம் படத்தை ரெயில்வே உபயோகப் படுத்தியதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.

கோவை – சென்னை சென்ட்ரல் இடையே, தினசரி சேரன் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில்  ஆயிரக்கணக்கான மக்கள்  பயணித்துவருகின்றனர்.

கோவைக்கு அடையாளமாக ஏராளமான பஞ்சாலைகள், இயற்கைக் காட்சிகள், அருகிலுள்ள ஊட்டி போன்ற சுற்றுலா தலங்கள் உள்ள நிலையில், ஈஷா யோகா படத்தை ரெயில்வே உபயோகப் படுத்தியற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து, தற்போது சேரன் ரயிலிலிருந்து, ஈஷா படம் அகற்றப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, கோவை ரயில் நிலையத்தின் படம் ஒட்டப்பட்டுள்ளது.