Skip to content
  • Tue. Sep 15th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா

‘கியூ-ஆர்’ கோடை பயன்படுத்தி பிளாட்பாரம் டிக்கெட்! பெங்களூரில் அறிமுகம்…

Sep 30, 2020

பெங்களூரு: பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், ‘கியூ-ஆர்’ கோடை பயன்படுத்தி பிளாட்பாரம் (நடைமேடை)  டிக்கெட் எடுக்கும் வசதி பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பரவி வரும் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், மாநில அரசு அறிவித்துள்ள தளர்வுகள் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.  இதற்கிடையில், பொதுமக்கள் மொத்தமாக கூடுவதை தவிர்க்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், முக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் கூடுவதை தடுக்க தென்மேற்கு ரெயில்வேயும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, ரயில்நிலையங்களில், வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளை வழியனுப்ப வரும் உறவினர்கள் கூட்டத்தை தடுக்க பிளாட்பாரம் டிக்கெட்டை ரூ.50 ஆக உயர்த்தி உள்ளது. மேலும்,  கூட்ட நெரிசலில் நின்று நடைமேடை (பிளாட்பாரம்)  டிக்கெட் எடுப்பதை தவிர்க்க, இந்திய ரெயில் நிலைய வளர்ச்சி கழகம் ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.

அதன்படி ‘கியூ-ஆர்’ கோடை பயன்படுத்தி நடைமேடை டிக்கெட் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் நடைமேடை மற்றும் நுழைவுவாயில் பகுதியில் 2 கியாஸ்க்  எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளது. அந்த எந்திரங்களில் ‘கியூ-ஆர்’ கோடு லேபிள் ஒட்டப்பட்டு உள்ளது.

பிளாட்பாரம் டிக்கெட் தேவைப்படுபவர்கள்,  கியூ- ஆர் கோடை ஸ்கேன் செய்து, பிளாட் பாரம் டிக்கெட் எடுக்கலாம்.

அதாவது ‘போன் பே’, ‘கூகுள் பே’, ‘பேடிஎம்’ உள்ளிட்ட செல்போன் செயலிகள் மூலம் தானியங்கி எந்திரங்களில் உள்ள ‘கியூ-ஆர்’ கோடை ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்தி நடைமேடை டிக்கெட்டை எடுத்து கொள்ளலாம்.

Post navigation

ஐக்கிய அரபு எமிரேட்டின் கோவிட் -19 தடுப்பு மருந்து பாதுகாப்பானது: ஆய்வு முடிவுகள்
மகாராஷ்டிராவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா: மேலும் 327 காவலர்களுக்கு பாதிப்பு

Related Post

இந்தியா

டெல்லியில் ஒரு அத்திப்பட்டி… 908 வாக்காளர்கள் மாயம்? சாந்தினி சௌக்கில் பரபரப்பு

இந்தியா

எல்பிஜி சிலிண்டர் விதிகளில் தளர்வு: கிராமப்புற மக்களும் இனி 25 நாட்களுக்கு ஒருமுறை சிலிண்டர் பெறலாம்

இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

உலகம்

உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar
உலகம்

ஹாரி–மேகன் அமெரிக்காவை விட்டு பிரிட்டனுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி: டிரம்ப் கருத்து

September 3, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer