டெல்லி :
நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் ரத்தான ரயில்களில் பயணம் செய்ய ஆன்லைன் இல்லாமல் நேரடியாக ரயில்வே கவுண்டர்களில் முன்பதிவு செய்தவர்களுக்கான பணம் இன்னும் திருப்பி தரப்படவில்லை.
கடந்த மார்ச் 24 முதல் வரும் ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதால். இந்த நேரத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் தங்கள் பணத்தை திரும்ப பெற கீழ்கண்ட அட்டவணை படி ரயில்வே கவுண்டர்களில் சென்று தங்கள் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று மேற்கு ரயில்வே தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
Passengers may please note the refund schedule & locations of PRS on Mumbai Central Division of WR for obtaining refunds. Pls do not rush as refund can be taken up to 180 days from the date of journey. #Social_Distanacing pic.twitter.com/PlSGnvHgxO
— Western Railway (@WesternRly) May 26, 2020
மேலும், இந்த தேதிகளில் பணத்தை திரும்ப பெற முடியாதவர்கள் பயணத்தேதியில் இருந்து 180 நாட்களுக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பயணம் தொடங்கும் தேதி | கவுண்டர்களில் திரும்பப்பெறும் தேதி |
22.03.2020 to 31.03.2020 | 27.05.2020 முதல் |
1.04.2020 to 14.04.2020 | 03.06.2020 முதல் |
15.04.2020 to 30.04.2020 | 09.06.2020 முதல் |
01.05.2020 to 15.05.2020 | 16.06.2020 முதல் |
16.05.2020 to 31.05.2020 | 23.06.2020 முதல் |
01.06.2020 to 30.06.2020 | 28.06.2020 முதல் |
தெற்கு ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் மட்டும் இந்த தேதிகளில் பணம் திருப்பி தரப்படும் என்றும், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரிக்கு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தென்னக ரயில்வே செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.