டில்லி:
கடந்த ஐந்து நாட்களில் இரு பெரிய ரயில் விபத்துகள் நிகழ்ந்ததை அடுத்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருக்கிறார்.
பிரதமரை சந்தித்து தனது ராஜினாமா முடிவை தெரிவித்ததாக சுரேஷ் பிரபு, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். இரு ரயில் விபத்துகளுக்கும் முழுமையாக தானே பொறுப்பேற்பதாக அவர் குறிப்பிட்டுள்ள அவர், துரதிருஷ்டவசமான இந்த விபத்துக்கள், மற்றும் உயிரிழப்புகள் தன்னை மிகவும் வேதனை அடைய வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமது ராஜினாமா விவகாரத்தில் பிரதமர் தனது முடிவை இன்னும் தெரிவிக்கவில்லை. அவசரப்பட வேண்டாம் பொறுத்திருங்கள் என தம்மை அவர் அறிவுறுத்தியுள்ளதாகவும் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
முன்னதாக இன்று காலை ரயில்வே வாரியத்தலைவர் ஏ.கே.மிட்டல் தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.