ராஜீவ்காந்தி கொலை: வெடிகுண்டு குறித்து உச்சநீதி மன்றத்தில் சிபிஐ அறிக்கை !

டில்லி,

ராஜீவ் கொலைவழக்கில் பயன்படுத்திய வெடிகுண்டு தொடர்பு பற்றிய அறிக்கையை சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் இன்று சிபிஐ தாக்கல் செய்தது.

ராஜீவ்காந்தி கொலைவழக்கு சம்பந்தமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் மனு கடந்த 17ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில், ராஜீவ் கொலைக்கு பயன்படுத்திய வெடிகுண்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதைத்தொடர்ந்து ராஜீவ் கொலை சம்பவம் பற்றி சிபிஐ தயாரித்த அறிக்கையை இன்று தாக்கல் செய்யுமாறு தீர்ப்பளித்தது.

இது தொடர்பாக இன்று நடந்த விசாரணையில் ,ராஜீவ்காந்தி மரணத்திற்கு காரணமான வெடி குண்டு பற்றிய அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது.