அரக்கோணம்: காட்பாடி அருகே சேதமடைந்த ரயில்வே பாலத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதால், டிசம்பர் 25, 26ந்தேதிகளில் 22 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரக்கோணம் – காட்பாடி பிரிவில் உள்ள முகுந்தராயபுரம் மற்றும் திருவலம் நிலையங்களுக்கு இடையிலான ரயில்வே பாலம் சேதம் அடைந்துள்ளது. இதனால் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பாலம் சீரமைக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறுது. இதன் காரணமாக இன்று (டிசம்பர் 25) மற்றும் நாளை (26ந்தேதி)  எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுகிறது என தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி,

  1. ரயில் எண்: 12007, எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் 25, 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
  2. ரயில் எண்: 12008, மைசூரிலிருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்படும் மைசூரு – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
  3. ரயில் எண்: 12243 , டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும், கோயம்புத்தூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில், 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
  4. ரயில் எண்: 12244, கோயம்புத்திரிலிருந்து மதியம் 3.05 மணிக்கு புறப்படும் கோயம்புத்தூர் – டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில், 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
  5. ரயில் எண் 22625, டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காலை 7.25 மணிக்கு புறப்படும் கேஎஸ்ஆர் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில், 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
  6. ரயில் எண் 22626, பெங்களூரிலிருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும் கேஎஸ்ஆர் – டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்ப்ரஸ் ரயில், 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
  7. ரயில் எண்: 12027 பெங்களூரிலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும் கேஎஸ்ஆர் – டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்ப்ரஸ் ரயில் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
  8. ரயில் எண்: 12028, டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் கேஎஸ்ஆர் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
  9. ரயில் எண் 22649, டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் ஈரோடு – ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில், 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
  10. ரயில் எண் 22650, ஈரோட்டிலிருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் ஈரோடு – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ஏற்காடு எக்ஸ்பிரஸ் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
  11. ரயில் எண் 12695 , டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மதியம் 3. 20 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் அதி விரைவு எல்ஸ்பிரஸ் 25 ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
  12. ரயில் எண்: 12696, திருவனந்தபுரத்திலிருந்து மாலை 5.15 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில் 25 ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
  13. ரயில் எண் : 22637, டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மதியம் 1.15 மணிக்கு புறப்படும் மங்களூர் மத்திய அதிவிரைவு வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
  14. ரயில் எண் 22638, மங்களூர் மத்திய ரயில் நிலையத்திலிருந்து இரவு 11. 45 மணிக்கு புறப்படும் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் அதிவிரைவு வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
  15. ரயில் எண்: 16085, அரக்கோணத்திலிருந்து மாலை 6.05 மணிக்கு புறப்படும் அரக்கோணம் – ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயில் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
  16. 16 ரயில் எண்: 16086, ஜோலார்பேட்டையிலிருந்து காலை 6.55 மணிக்கு புறப்படும் ஜோலார்பேட்டை அரக்கோணம் எக்ஸ்பிரஸ் ரயில், 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
  17. ரயில் எண்: 16089 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மாலை 5.55 மணிக்கு புறப்படும் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – ஜோலார்பேட்டை ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில், 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
  18. ரயில் எண்: 16090, ஜோலார்பேட்டையிலிருந்து காலை 5 மணிக்கு புறப்படும் ஜோலார்பேட்டை – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில், 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.
  19. ரயில் எண்: 06033, சென்னை கடற்கரையிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் வேலூர் எக்ஸ்பிரஸ் ரயில் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
  20. ரயில் எண்: 06034, வேலூரிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் வேலூர் – சென்னை கடற்கரை எக்ஸ்பிரஸ் ரயில் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
  21. ரயில் எண்: 12671, டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 9.05 மணிக்கு புறப்படும் மேட்டுபாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் 25 ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
  22. ரயில் எண்: 12672, மேட்டுப்பாளையத்திலிருந்துஇரவு 9. 20 மணிக்கு புறப்படும் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் நீலகிரி எக்ஸ்பிரஸ் 25 ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.