சென்னை: தமிழகத்தில் 7ந்தேதி முதல் ரயில் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம், சென்னையில் இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மற்றும் டிக்கெட் கவுன்ட்டர்கள் செயல்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கில் இருந்து பல தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் 7ந்தேதி தமிழகத்தில், ரயில் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, சென்னையில் இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மற்றும் டிக்கெட் கவுன்ட்டர்கள் செயல்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.
சென்னையில் 7-ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவையும் தொடங்கும் நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதில் உடல் வெப்ப நிலை பரிசோதனைக்கு பிறகே பயணிகளை மெட்ரோ ரயில் நிலையத்தில் அனுமதிக்க வேண்டும் எனவும், பயணிகள் முகக்கவசம் அணிந்திருப்பதை மெட்ரோ ரயில் நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும், தொற்று அறிகுறி இல்லாத நபர்களை மட்டுமே மெட்ரோ ரயிலில் அனுமதிக்க படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.