சேலம்: ரயில்பாதையில் பணி நடைபெற உள்ளதால், ஜூன் 28ம் தேதி சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக செல்லும் இரு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப் படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி, சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக செல்லும் இரு ரயில்கள் சேலம், திருப்பத்தூர் வழியாக இயக்கபடும் என தெரிவிக்கப்பட்டுளளது.
இதுகுறித்து தெற்க ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஓமலுார் – மேட்டூர் அணை இடையே, இன்ஜினியரிங் மற்றும் இரட்டை ரயில்பாதை பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக, ரயில் பாதைகளில் தடை, சிக்னல்கள் இயங்காமை மின்தடை உள்ளிட்ட பிரச்னைகள் எழும். இதைக்கருத்தில் கொண்டு, இரு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி, கோவை – லோக்மான்ய திலக் இடையே இயக்கப்படும், எக்ஸ்பிரஸ் ரயில், வரும், 28ம் தேதி கோவையிலிருந்து, காலை 8:50 மணிக்கு புறப்படும்.
சேலம், தர்மபுரி, ஓசூர், வழியாக இயக்கப்படும் இந்த ரயில் சேலம், திருப்பத்துார், பங்கார்பேட் ஆகிய வழித்தடத்தில் இயக்கப்படும்.
இதேபோல், எர்ணாகுளம் – பெங்களூரு இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், எர்ணாகுளத்தில் இருந்து, வரும், 28ம் தேதி காலை, 9:10 மணிக்கு புறப்படும். சேலம், தர்மபுரி, ஓசூர், கார்மேலராம் வழியாக இயக்கப்படும் இந்த ரயில் சேலம், திருப்பத்துார், பங்காருபேட், பையப்பனஹள்ளி வழியாக இயங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.