சென்னை: ரெயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்த விவகாரம் மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காதலுக்கு கண் இல்லை என்பது, இந்த மாணவியின் மரணத்தைத் தொடர்ந்து, மாணவியின் தந்தையில் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில், காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால், காதலியை காதலன் ரயிலில் தள்ளி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினான். காதலர்கள் இருவரும் கல்லூரியில் சேர்ந்து படித்து வருவதும், இருவரது குடும்பமும், காவலர்கள் குடும்பம் என்பதுடன், அருகருகே வசித்து வருவதும் தெரிய வந்தது.  இவர்களது காதல் விவகாரம் இருவரது வீட்டுக்கும் தெரியவந்த நிலையில், கொலை செய்யப்பட்ட மாணவி சத்தியப்பிரியாவின் அதற்க பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சத்தியப்பிரியா, சதீஷை விட்டு விலக தொடங்கினார். இதனால் அவரதுகாதலன் சதீசுக்கும் அவருக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில்தான், நேற்று மதியம்  பரங்கிமலை ரயில் நிலையத்தில், வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதற்காக வந்த சத்தியப்பிரியாவிடம் சதீஷ் வந்து பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த சமயத்தில்,  தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரெயில் நடைமேடை பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மாணவி சத்தியபிரியாவா, காதலன் சதீஷ் ரயில்முன் தள்ளி விட்டார். இதனால், ரயில் மோதி சத்தியபிரியா அந்த இடத்திலேயே பலியானார். உடனே  சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடினார்.

பின்னர், ரெயில்வே போலீஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், வழக்கில் தலைமறைவாக இருந்த சதீஷை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில், இன்று அதிகாலை சென்னை துரைபாக்கத்தில் வைத்து அவரை கைது செய்தனர். மேலும் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, மகள் கொலை செய்யப்பட்டதையறிந்து வேதனையடைந்த மாணவியின் தந்தை மாணிக்கத்திற்கு இன்று அதிகாலை  நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே, உறவினர்கள் அவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டதோடு, அவரது தந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.