துரை

றிமுதல் செய்யப்பட்ட மது பானங்களை நீதிமன்ற அறைக்குள்ளேயே அழிக்கச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.   இதனால் மதுபானம் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.  திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் கடந்த ஏப்ரல் 28 ஆம்தேதி அவ்வாறு விற்பனை செய்யப்பட்ட மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஸ்டோர் ரூமில் வைக்கப்பட்டன.   இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை மதுபானங்கள் இவ்வாறு நீதிமன்ற அறையில் வைக்கப்படுவது வழக்கமாகும்.

நான்கு மதுப்பிரியர்கள் எங்கும் மதுபானம் கிடைக்காத  நிலையில் இங்குள்ள மதுபானங்களை பருகுவதற்காக நீதிமன்ற அறையில் இருந்து திருடி உள்ளனர்.  இந்த நால்வரும் கைது செய்யப்பட்டு வழக்குப் பதியப்பட்டுள்ளது.    இது போலத் திருட்டுக்கள் தொடராமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அரசு வழக்கறிஞர் நடராஜன் நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் எழுதினார்.  இதை வழக்காகப் பதிவு செய்து நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் கிருஷ்ணவல்லி விசாரித்தனர்,

இது குறித்து அமர்வு, “தமிழ்நாடு மது விலக்கு விதிகளின்படி மது வகைகளை அழிக்க எவ்வித விதிமுறைகளும் அளிக்கவில்லை.  எனவே மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்ட உடன் அது குறித்த கணக்கை எடுத்துத் தகுந்த சாட்சிகளுடன் அதிகாரிகள் பதிய வேண்டும்.  அவ்வாறு பதிந்த பிறகு மது பானங்களை நீதிமன்றத்தில் மது பானங்கள் வைக்கும் அறையிலேயே உடனடியாக அழிக்க வேண்டும்.

கணக்கு எடுக்கும் போதும் மது பானங்களை அழிக்கும் போது வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்க வேண்டும்.   தேவைப்பட்டால் சிறிதளவு மட்டும் சாம்பில் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.   இந்த கணக்கு பட்டியல், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வழக்கை விசாரிக்கும் நீதிமன்றங்கள் சான்றாக எடுத்துக்கொள்ள வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளது.  இந்த வழக்கு ஜூன் மாதம் 1 ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.