சென்னை,
தமிழக தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் இன்று காலை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தமிழக தலைமை செயலாளராக இருந்தவர் ராம்மோகன் ராவ். இவரது வீடு மற்றும் அவரது மகன் மற்றும் உறவினர் வீடுகள், ராம் மோன் ராவின் தலைமை செயலக அறை ஆகியவற்றில் நேற்று அதிகாலை முதல் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.
இந்த சோதனையில் ஏராளமான பணம் மற்றும் தங்கம் கைப்பற்றப்பட்டது. மேலும் ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இன்று காலை 7 மணி வரை, சுமார் 25 மணி நேரம் ராம் மோகன் ராவ் வீட்டில் சோதனை நடைபெற்றது. அதன்பிறகே ஆவணங்களுடன் மத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர்.
இதைத்தொடர்ந்து நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் ஓ.பி.எஸ் அவசர ஆலோசனை நடத்தினார். அதையடுத்து இன்று காலை 7 மணி அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.
அதற்கான உத்தரவு இன்று காலை 7.30 மணி அளவில் ராம் மோகன் ராவுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.