அ.தி.மு.க.வினர் அதிரடி!  ஜெ.தீபா பேரவை!

Must read


.தி.மு.க. பொதுச் செயலாளராக, வர முயற்சித்துக்கொண்டிருக்கும் சசிகலாவுக்கு கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அதே நேரம் கீழ்மட்ட தொண்டர்களிடையே சசிகலாவுக்கு கடும் எதிர்ப்பு தோன்றியிருக்கிறது. ஜெ., – சசி போஸ்டர்களில், சசிகலா முகத்தை கிழித்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துவருகிறார்கள்.
இதற்கிடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகள்  தீபாவுக்கு அதிமுக கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கல்.
இந்த நிலையில்,  சேலத்தில் 44வது வார்டு அதிமுக நிர்வாகிகள் “ஜெயலலிதா தீபா பேரவை” என்ற அமைப்பைத் துவங்கியிருக்கிறார்கள். சேலம் பகுதியில் உள்ள அதிமுக தொண்டர்களை இந்த பேரவையில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.
தீபாவை அதிமுகவுக்கு தலைமை ஏற்க இவர்கள் அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
 

More articles

Latest article