டெல்லி: நாடாளுமன்றத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய,  முன்னாள் ராணுவ தளபதி நரவணேவின் சுயசரிதை புத்தகத்தை காட்டி ராகுல்காந்தி பேசியதைத் தொடர்ந்து,  பெங்குவின் ரேண்டம் நிறுவனம் விளக்கம் வெளியிட்டு உள்ளது.

இன்னும்  ‘வெளியிடப்படாத’ ஜெனரல் நரவனே நினைவுக் குறிப்பு, நாடு முழுவதும்  சர்ச்சையைத் தூண்டியுள்ள நிலையில், பெங்குவின் புத்தக வெளியீட்டாளர் தெளிவுபடுத் தல்களை வெளியிட்டுள்ளது.

டிஜிட்டல் மற்றும் பிற வடிவங்களில் கையெழுத்துப் பிரதி சட்டவிரோதமாகப் புழக்கத்தில் விடப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து டெல்லி காவல்துறை விசாரணையைத் தொடங்கியதைத் தொடர்ந்து வெளியீட்டாளரின் அறிக்கை வந்துள்ளது.

 மக்களவை எதிர்க் கட்சி தலைவர் ராகுல்காந்தி  குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது மக்களவையில்  பேசும்போது, சீன ராணுவ ஆக்கிரமிப்பு குறித்து முன்னாள் ராணுவ தளபதி எம்.எம்.நரவனே தனது சுயசரிதை புத்தகத்தில் எழுதி இருப்பதாக கூறி, அந்த புத்தகதை காட்டி  சர்ச்சையை எழுப்பினார். ஆனால் அந்த புத்தகம் இன்னும் வெளியிடப்படவில்லை என்று மத்திய  அரசு மறுத்தது. இதுஅதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, புத்தகத்தின் கையெழுத்து பிரதிகளை சட்டவிரோதமாக புழக்கத்தில் விட்டதாக டெல்லி போலீசார் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து புத்தக நிறுவனமான பெங்குவின் ரேண்டம் ஹவுஸ் இண்டியா  விளக்கம் வெளியிட்டு உள்ளது.

அதில்,  முன்னாள் ராணுவ தளபதி நரவனே எழுதிய ‘போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ் டினி புத்தகத்தின் பிரத்யேக பதிப்புரிமையை நாங்கள் பெற்றுள்ளோம். அந்த புத்தகம் இன்னும் பிரசுரிக்கப்படவில்லை; அச்சு வடிவிலோ, டிஜிட்டல் வடிவிலோ எந்த பிரதியும் பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை என்று  புத்தக பதிப்பகம் திட்டவட்டமாக தெரிவித்தது. எனவே, அச்சு வடிவிலோ, டிஜிட்டல் வடிவிலோ புத்தகத்தை முழுமையாகவோ, பகுதி அளவிலோ வெளியிட்டால், அது பதிப்புரிமையை மீறுவதாக அமையும். அத்தகைய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அந்த பிரதிகள் பறிமுதல் செய்யப்படும் என்று பெங்குவின் ரேண்டம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் மத்தியஅரசு,   ஓய்வுபெற்ற மற்றும் பணியில் இருக்கும் ராணுவ அதிகாரிகள் புத்தகங்கள் எழுதுவது குறித்த விதிகளை கடுமையாக்க ஒன்றிய அரசு புதிய விதிமுறைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,  தற்போதுள்ள சேவை விதிகள் மற்றும் அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டம் ஆகியவை உள்ளடக்கிய புதிய விதிகளை அரசு உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

[youtube-feed feed=1]