கொல்கத்தா: ராகுல்காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை  மேற்கு வங்கத்தில் நுழைந்துள்ளது. இதையடுத்து யாத்திரைக்கு 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தி பாரத் வடகிழக்கு மாநிலங்களில்  பாரத் நியாய் யாத்திரை என்ற பெயரில் வாகனத்தில் யாத்திரை மேற்கொண்டுள்ளார்.  இந்த யாத்திரை, கடந்த வாரம் வியாழனன்று பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில்  அசாமில் நுழைந்த யாத்திரை 8வது நாளான நேற்று காலை அங்கிருந்து புறப்பட்டு  கூச் பீகார் மாவட்டத்தில் உள்ள பக்சிர்ஹட் வழியாக கோலக்கஞ்சில் நுழைந்தது. அங்கு ராகுல் யாத்திரைக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் நுழைந்தது. அங்கு காங்கிரஸ் மாநில தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ராகுலை வரவேற்றார். அங்கு அவரிடம் தேசிய  கொடி ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காக்ராபார் சவுக் நோக்கி யாத்திரை புறப்பட்டது. பின்னர் மா பவானியில் இருந்து ராகுல் பாத யாத்திரையாக சென்று பொதுமக்களை சந்தித்தார். தொடர்ந்து இன்றும் நாளையும் மேற்கு வங்க மாநிலத்தில் நீதி யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 முன்னதாக மேற்குவங்கத்தில்  செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, ‘‘பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் நாடு முழுவதும் வெறுப்பு மற்றும் வன்முறையை பரப்பி வருகின்றது. நாடு முழுவதும் அநீதி நிலவி வருவதால் யாத்திரையில் நீதி என்ற வார்த்தை இணைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அநீதிக்கு எதிராக இந்தியா கூட்டணி போராடும்”என்றார்.

இதனை தொடர்ந்து  ராகுல்  யாத்திரைக்கு இரண்டு நாள் ஓய்வு விடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ராகுல்காந்தி சிறப்பு விமானம் மூலமாக டெல்லி புறப்பட்டு சென்றார். 28ம் தேதி யாத்திரை மீண்டும் தொடங்குகிறது.