ஐதராபாத்: குமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொள்ளும் ராகுல்காந்தி, இன்று தெலுங்கானாவில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இன்று 57வது நாளாக தெலுங்கானா மாநிலத்தில் யாத்திரை மேற்கொள்ளும், ராகுல், தனக்குத்தானே ‘கசையடி’ அடித்த வீடியோ வைரலாகி வருகிறது. ராகுலின் இந்த செயல் மக்களிடையே கண்ணீரை வரவழைத்தது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில், ‘பாரத் ஜோடா யாத்ரா’ என்னும் பயணத்தை ராகுல் காந்தி தமிழ்நாட்டில் தொடங்கி நடத்தி வருகிறார். 57வது நாளான இன்று (நவம்பர் 3ந்தேதி) தெலங்கானா மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த பகுதியில் இன்று பொனாலு பண்டிகை நடைபெற்று வருகிறது. இந்த பண்டிகையில் கலந்துகொண்ட ராகுல், அங்குள்ள கலைஞர்களுடன் சேர்ந்து ராகுல் காந்தியும் உற்சாகமாக திம்சா நடனமாடி மகிழ்ந்தார். பண்டிகையின் ஒரு பகுதியாக அங்குள்ள கலைஞர்கள் சிலர் தங்களை சாட்டையால் அடித்து கொண்டாடினர். இதை கண்ட ராகுல், அவர்களிடம் இருந்து சாட்டையை வாங்கி தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். ராகுல் காந்தி சாட்டையால் அடிக்கும்போது தொண்டர்கள் அனைவரும் சத்தம் போட்டனர். ராகுலின் இந்த செயல் அங்கிருந்தோர் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
“நாங்கள் அனைவரும் இந்தியர்கள் உங்களுக்கு போதுமான கசையடிகளைக் கொடுத்துள்ளோம்” சிலர் நேரடியாகவும் மற்றவர்கள் இப்போது வரை அமைதியாகவும் இருக்கிறார்கள். இதுவரை நடந்த #பாரத்ஜோடோ யாத்ராவில் ஒவ்வொரு நாளும் நினைவு கூரப்படும், இனி வரும் காலங்களில் போற்றப்படும். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
முன்னதாக 1ந்தேதி சம்ஷாபாத்தில் உள்ள மாதா கோயிலில் இருந்து நடைபயணம் தொடங்கியவர், அங்கு நெக்லஸ் சாலையில் உள்ள இந்திரா காந்தி சிலை அருகே நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது, “டிஆர்எஸ் மற்றும் பாஜக பல சமயங்களில் ஒன்றாகச் செயல்பட்டுள்ளன. தேர்தல் வரும்போது பிரதமரும் தெலங்கானா முதலமைச்சரும் தேர்தல் வரும்போது ஒருவரையொருவர் விமர்சிப்பதுபோல் நடிப்பதாக குற்றம் சாட்டிய ராகுல், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அழைத்தால் பிரதமர் மோடி பதிலளிப்பார். மத்திய பாஜக அரசும், தெலங்கானாவில் உள்ள டிஆர்எஸ் ஆட்சியும் விவசாயிகளின் போராட்டத்தின்போது அவர்களைக் காப்பாற்ற முன்வரவில்லை. விவசாயிகள் முதல் இளைஞர்கள் வரை, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் பல இன்னல்களை அனுபவிக்கின்றனர் என்று கூறினார்.
சமீபத்தில், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் இன்று ஒரு கிராமத்தில் நடந்த கோவர்த்தன் திருவிழாவில் பங்கேற்றார். அவ்விழாவின் ஒரு சடங்காக கசை அடி நிகழ்ச்சியில் பங்கேற்று பொது மக்கள் மத்தியில் முதல்வர் கசை அடி வாங்கியது குறிப்பிடத்தக்கது.