டில்லி:

லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் இன்று ராகுல்காந்தியை சந்தித்து பேசினார்.

பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் ராஷ்டரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பதவி வகித்தார். இடையில் ஏற்பட்ட கூட்டணி முறிவு காரணமாக பாஜக.வுடன் நிதிஷ்குமார் கைகோர்த்துக் கொண்டு ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார். இதனால் தேஜஸ்வி யாதவ் பதவி இழக்க நேரிட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தியை தேஜஸ்வி யாதவ் இன்று சந்தித்து பேசினார். இருவரும் இன்று ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர். அப்போது பீகார் அரசியல் நிலவரம் குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் இருவரும் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.