மதுரை:

துரை மாவட்டம் தென்பழஞ்சியில் நடந்த தைப் பொங்கல் கொண்டாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.

இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டாக மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வருவதாக முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.


இன்று மதியம் 12 மணியளவில் அவனியாபுரம் வந்த ராகுல் காந்தி, ஜல்லிக்கட்டு போட்டிகளை ரசித்தார். அப்போது பேசிய அவர், ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், தமிழ் கலாச்ச்சாரம், தமிழின் சிறப்பு. அதனை கொண்டாட வந்திருக்கிறேன். நான் தமிழக மக்களோடு நிற்பது எனது கடமை அனவருக்கும் பொங்கல் வாழ்ந்து என்று தெரிவித்தார்.

பின்னர் மதுரை மாவட்டம் தென்பழஞ்சியில் நடந்த தைப் பொங்கல் கொண்டாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்ற வந்திருந்தார். அவரை ஆரத்தி எடுத்து அப்பகுதி மக்கள் வரவேற்றனர். தமிழக மக்களின் பராம்பரியத்தை மதித்து, பெண்கள் வைத்த ஆரத்தி பொட்டு வைத்தை ஏற்று கொண்ட ராகுல் காந்தி, அங்கு கூடியிருந்த மக்களுடன் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தார்.