ஸ்ரீபெரும்புதூர்:
பாதயாத்திரை துவங்குவதற்காக, தமிழகம் வந்துள்ள ராகுல், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தந்தை ராஜிவ் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பாத யாத்திரையை துவங்குவதற்கு முன், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவகத்திற்கு இன்று காலை 6.45 மணிக்கு வந்த ராகுல், ராஜிவ் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தார்.

பின்னர் மவுன அஞ்சலி செலுத்தினார். நினைவகத்தை சுற்றி மரக்கன்றுகள் நட்டார். ராகுலுடன், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, செல்வப்பெருந்தகை, கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் சிவக்குமார் உள்ளிட்டோர் வந்தனர்.
Patrikai.com official YouTube Channel