பெங்களூரு:
பெண்களை மதிக்கக் கூடியவர் ராகுல் காந்தி என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
ரபேல் பேரம் குறித்து ஜெய்ப்பூர் பேரணியில் பேசிய ராகுல்காந்தி, 54 அங்குல மார்புடைய வாச்மேன், ஒரு பெண்ணை முன்னே நிறுத்திப் பேசச் சொல்லிவிட்டு, தப்பியோடிவிட்டார் என்றார்.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனைப் பற்றி அநாகரீமாக ராகுல் பேசியதாக பாஜக தரப்பினர் குற்றஞ்சாட்டினர்.
இதனை மறுத்த ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்காக இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டரை மணி நேரம் பேசினாரா, இல்லையா?. இதைத்ததான் அவ்வாறு குறிப்பிட்டேன். மற்றபடி பெண்களை அவமதிப்பவன் அல்ல நான் என்று கூறியிருந்தார்.
ராகுல் காந்தியின் இந்த கருத்தை நடிகர் பிரகாஷ் ராஜ் வரவேற்றுள்ளார்.
இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், திருநங்கைகளின் உரிமைக்காக போராடும் அப்சராவை காங்கிரஸ் கட்சியின் பெண்கள் பிரிவின் தலைவராக ராகுல் நியமித்துள்ளார்.
மேலும் ஏற்கெனவே சில திருநங்கைகளுக்கு அவர் கட்சிப் பதவி கொடுத்துள்ளார். ராகுல் காந்தி கூறிய கருத்தை ஒரே கண்ணோட்டத்துடன் ஏன் பார்க்க வேண்டும்.
ரபேல் விவகாரதில் பிரதமர் மோடி பதில் அளிக்கவில்லை என்பதும், விவாவதத்தின்போது அவர் நாடாளுமன்றத்துக்கு வரவில்லை என்பதும் உண்மைதானே என்றார்.