வயநாடு மற்றும் அமேதியில் ராகுல் காந்தி போட்டி : காங்கிரஸ் அறிவிப்பு

Must read

டில்லி

யநாடு மற்றும் அமேதி ஆகிய இரு தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே தொடர்ந்து உத்திரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வென்று வருகிறார்.  இந்த முறை அவர் இரு மக்களவை தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி – பகுஜன்சமாஜ் கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறவில்லை எனினும் அந்த தொகுதியில் வேட்பாளரை அமேதி கூட்டணி நிறுத்தவில்லை. அவர் இரண்டாவது தொகுதியாக தென் இந்தியாவில் இருந்து போட்டியிடுவார் என யூகங்கள் கிளம்பின.

அதை ஒட்டி கர்நாடகம், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஏதேனும்தொகுதியில் இருந்து போட்டியிட உள்ளார். என கூறப்பட்டது. தற்போது காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி அமேதி மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு ஆகிய இரு தொகுதிகலில் போட்டியிட உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

More articles

Latest article