டில்லி

ராகுல் காந்தி அறிவித்துள்ள மிகவும் வறுமையில் உள்ள மக்களுக்கு ரூ. 72000 வருட ஊதியத்துக்கு ரூ. 3.5 லட்சம் கோடி செலவாகும் என காங்கிராச் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று தாங்கள் அட்சிக்கு வந்தால் மிகவும் வறுமையில் உள்ள மக்களுக்கு குறைந்த பட்சம்ரூ.72000 வருமானம் கிடைக்க வழி செய்யப்படும் என அறிவித்தார். பாஜக அரசு வருடத்துக்கு ரூ.6000 அளிக்கப்படும் என்பதற்கு நேர்மாறாக இந்த அறிவிப்பு இருந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பாஜகவினர் இது குறித்து காங்கிரஸ் கணக்கிடவில்லை என குறை கூறியது.

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரவீன் சக்ரவர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தற்போது நாட்டின் குறைந்த பட்ச வருமானம் என்பது என்ன என்படஹிக் குறித்து நாங்கள் பல காலமாக ஆய்வு செய்துள்ளோம். இதற்கு இரு முக்கிய காரணங்கள் உள்ளன.

ஒன்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சொன்னது போல ஏழ்மையை முழுமையாக ஒழிப்பதாகும். தற்போது மிக வேகமாக குறைந்து வரும் பொருளாதார சூழ்நிலையில் ஒரு புதிய முறையில் ஆய்வு நடத்தி மக்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் தொகையை கண்டறிய வேண்டி இருந்தது. நாடு அதை உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது.

அடுத்தது, தற்போதைய இந்திய சூழ்நிலையில் குறைந்த பட்ச வருமானம் என்பது இந்திய பொருளாதார சீர்திருத்தத்தை மாற்றி அமைக்கும் என நம்பப்படுகிறது. இந்த முறையில் பொதுமக்களுக்கு பணத்தை நேரடியாக அளிப்பது அடிப்படை ஆகும். நுகர்வை பொறுத்து பொருளாதார தேவைகள் அமையும்.

தற்போதுள்ள நிலையில் இந்திய குடும்பம் ஒவ்வொன்றுக்கும் சுமார் ரூ. 5000 – ரூ.6000 வரை குறைந்த பட்ச வருமானம் உள்ளது. அந்த வருமானம் உள்ளவர்களே மிகவும் வறுமையில் உழல்வார்கள். எனவே நாங்கள் குடும்பத்துக்கான குறைந்த பட்ச மாத வருமானம் ரூ. 12000 என முடிவுக்கு வந்தோம். எனவே இந்த வித்தியாசமான ரூ.6000 ஐ மாதம் அரசு அளிக்கும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் கோடி செலவாகும். இதற்காக ஒரு குழு அமைக்கப்படும். தர்போதுள்ள நிலையில் பொருளாதார சூழ்நிலை ஜிஎஸ்டியினால் மிகவும் கீழே சென்றுள்ளது. எனவே இதற்கு அனைத்து மாநிலங்களின் உதவியும் கோரப்படும். இது பல கட்டமாக முன்னேறும். இதுதான் தற்போதைய திட்டமாகும். எனவே இது குறித்து வரும் 2020 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சரியான எண்ணிக்கை கிடைக்காது. ” என தெரிவித்துள்ளார்.