டில்லி

க்களை எரிபொருள் விலை குறைப்பு அறிவிப்பால் மத்திய அரசு முட்டாளாக்குவதாக ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.   பல இடங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110 மற்றும் டீசல் விலை ரூ.100 மற்றும் அதற்கு அதிகமாக விற்பனை ஆனது.     இதனால் அனைத்து அத்தியாவசிய பொருட்க்ளி விலையும் கடுமையாக உயர்ந்தது.

சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையே மிகவும் சிரமத்துக்கு உள்ளானது.  இந்நிலையில் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைத்தார்.  அதாவது பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 8.22 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.6.70 குறைக்கப்பட்டது..

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில்,

“இனி நாள்தோறும் மீண்டும் பெட்ரோல் விலை ரூ.0.8, 0.30 என உயர ஆரம்பிக்கும்.  மத்திய அரசு பண வீக்கத்திலிருந்து உண்மையான நிவாரணத்தை மக்களுக்கு அளிக்க வேண்டும்.  மக்களை எரிபொருள் விலை குறித்த அறிவிப்பால் முட்டாளாக்குவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்”

எனப் பதிவிட்டுள்ளார்.