பாகிஸ்தானின் பெண் உளவாளிக்கு ரகசியத் தகவல் அளித்த ராணுவ வீரர் கைது

Must read

ஜெய்ப்பூர்

ராணுவ வீரர் ஒருவர் பாகிஸ்தான் பெண்  உளவாளிக்கு ரகசியத் தகவல் அளித்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராணுவ வீரர் பிரதீப் குமார் என்பவர் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்  இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பணி புரிந்து வருகிறார். இவரிடம் ஒரு பாகிஸ்தான் பெண் உளவாளி அறிமுகமாகிப் பழகி வந்துள்ளார்..  அந்த பெண் தன்னை கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ராணுவ செவிலியர் எனக் கூறி உள்ளார்.

சுமார் 6 மாதங்களாகப் பழகி வந்த அவரை டில்லியில் அந்தப் பெண் சந்தித்து காதலை தெரிவித்துள்ளார்.  அதை நம்பிய பிரதீப் குமார் அவரிடம் பல முக்கிய ராணுவத் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.  இந்த தகவல்களை அவர் அந்த பெண் உளவாளிக்கு ஃபேஸ்புக் மெசெஞ்சர் வாட்ஸ்அப் போன்ற தளங்கள் மூலம் அனுப்பி உள்ளார்

பிரதீப் மீது சந்தேகம் ஏற்பட்டதால் காவல்துறையினர் அவரை கண்காணித்து வந்துள்ளனர்.  இந்நிலையில் பிரதீப் குமார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.   அரசு ரகசிய சட்டம் 1923 இன் கீழ் பிரதீப் குமார் மீது வழக்குப் பதியப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article