கர்நாடக மாநிலத்தில் இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டுவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அங்குள்ள நாகரோலே வனப்பகுதியை இன்று பார்வையிட்டார்.

மைசூரில் தசரா விழா விமரிசையாக கொண்டாடப்படுவதன் காரணமாக நேற்றும் இன்றும் பாதயாத்திரைக்கு ஒய்வு அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து மைசூர் அருகில் உள்ள நாகரோலே சென்ற அவர் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை பார்வையிட்டார்.

அப்போது குட்டி யானை ஒன்றின் வால் மற்றும் தும்பிக்கை பகுதியில் அடிபட்டு தனது தாய் யானை அருகில் நின்று கொண்டிருந்தது.

அந்த யானைக்கு சிகிச்சை வழங்க வனவிலங்கு அதிகாரிகளிடம் கூறிய அவர் இதுகுறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

வனவிலங்குகள் மீது ராகுல்காந்தி காட்டியுள்ள இந்த பரிவு குறித்து சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது