டில்லி,

கில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இதை காங்கிரஸ் தேர்தல் செயலாளர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் அறிவித்து உள்ளார்.

தலைவர் பதவிக்கு வேறு யாரும் போட்டியிடாததால், போட்டியின்றி ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வரும் 16-ம் தேதி ராகுல்காந்தி தலைவராக பொறுப்பு ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக தற்போது சோனியா காந்தி இருந்து வருகிறார். அவரது உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுலை நியமிக்கலாம் என பலவாறாக கருத்து கூறப்பட்டு வந்தது.

சோனியா காந்தியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, கட்சியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும் ராகுல் காந்தியை தலைவராக நியமிக்க வேண்டும் கட்சியின் மூத்த தலைவர்களும் கோரி வந்தனர்.

ஏற்கனவே  கடந்த நவம்பர் 20ந்தேதி நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது.

அதன்படி கடந்த 4ந்தேதி தலைவர் பதவிக்கு ரால் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருக்கு ஆதரவாக 89 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு வாபஸ் வாங்க இன்று கடைசி நாள். இதுவரை யாரும் எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்யாததால், ராகுல்காந்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் பிரிவு செயலாளர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அறிவித்து உள்ளார்.

வரும் 16ந்தேதி ராகுல்காந்தி  அகில இந்திய காங்கிரசின் தலைவராக பொறுப்பேற்கிறார்.

தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல்காந்திக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.