காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பயணம் கேரளாவில் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.
19 நாட்கள் கேரளாவில் பயணம் செய்ய உள்ள ராகுல் காந்தி செப்டம்பர் 30 ம் தேதி தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டம் கூடலூரை வாகனத்தில் கடந்து கர்நாடகா செல்ல இருக்கிறார்.
கர்நாடகாவில் 21 நாட்கள் பயணம் செய்ய இருக்கும் அவர் பெல்லாரி வழியாக ஆந்திரா சென்று மீண்டும் ரெய்ச்சூர் வழியாக கர்நாடகாவில் 2 வது கட்ட பாதயாத்திரை செய்வார்.
அங்கிருந்து தெலுங்கானா வழியாக மகாராஷ்டிரா செல்லும் அவர் பின்னர் மத்திய பிரதேசம் செல்கிறார்.
மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜஸ்தான் வழியாக உத்தர பிரதேசம் செல்கிறார்.
உ.பி.யைத் தொடர்ந்து டெல்லி வழியாக ஹரியானா செல்லும் அவர் அங்கிருந்து பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் வழியாக காஷ்மீர் சென்றடைகிறார்.
மொத்தம் 150 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த பாத யாத்திரையில் 3570 கி.மீ. தூரம் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார்.
2024 தேர்தலில் துடிப்பு மிக்க இளைஞரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இளைஞர்களும் பொதுமக்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பது கடந்த ஆறு நாட்களாக தமிழ் நாட்டு மற்றும் கேரளாவில் ஆயிரக்கணக்கானோர் அவருக்கு அளித்து வரும் வரவேற்ப்பின் மூலம் தெரியவந்துள்ளது.