யநாடு

யநாடு தொகுதியில் ராகுல் காந்திக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக அவரை எதிரித்து போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர் துஷார் வெல்லப்பள்ளியின் தந்தை கூறி உள்ளார்.

நேற்று நடந்த மக்களவை தேர்தல் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதிகளில் ஒன்றான வயநாடு தொகுதியிலும் வாக்குப்பதிவு நடந்தது. இந்த தொகுதியில் 13,57,819 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 6.73.011 ஆண்களும் 6.84.807 பெண்களும் ஒரு மாற்றுப் பாலினத்தவரும் உள்ளனர். இந்த தொகுதியில் மொத்தம் 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக கூட்டணிக் கட்சியான பாரத் தர்ம ஜன சேனா கட்சியின் சார்பில் துஷார் வெல்லப்பள்ளி நிறுத்தப்பட்டுள்ளார். பி டி ஜே பி எனப்படும் இந்த கட்சி பாஜகவின் கேரள கூட்டணிக் கட்சிகளில் பெரிய கட்சியாகும். துஷார் வெல்லப்பள்ளியின் தந்தை வெல்லப்பள்ளி நடேசன் இந்த பகுதியின் புகழ்பெற்ற சமூக சேவகர் ஆவார். இவர் நேற்று வயநாடு தொகுதியில் வாக்களித்தார்.

அதன் பிறகு நடேசன் செய்தியாளர்களிடம், “வயநாடு தொகுதியில் சிறுபான்மையினர் அதிகமாக உள்ளனர். அவர்களின் ஆதரவு காங்கிரசுக்கு இருப்பதால் அக்கட்சித் தலவர் ராகுல் காந்திக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் தலைவர் போட்டியிடுவதால் கேரளாவில் காங்கிரசுக்கு ஆதரவு அளித்துள்ளது.

ஒரு வேளை இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற பிறகு ராகுல் காந்தி அமேதி தொகுதியை மட்டும் வைத்துக் கொண்டு வயநாடு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்தால் காங்கிரஸ் கட்சி கேரள மாநிலத்தில் மிகவும் பலவீனமாகி விடும்” என தெரிவித்துள்ளார்.