டில்லி

காங்கிரஸ் கட்சி நாளை அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு போரட்டத்தை நடத்தும் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு அரசியலமைப்பு சட்டத்தை மதிப்பதில்லை என புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.   தற்போது தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை எதிர்ப்பு சட்டத்தில் உச்ச நீதிமன்றம் பல திருத்தங்கள் செய்துள்ளது.   அதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.   மத்திய பாஜக அரசு இந்த சட்ட திருத்தம் குறித்து எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என நாட்டில் பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு போராட்டம் ஒன்றை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.   இது குறித்து அவர், “இந்திய அரசியலமைப்பு சட்டம் பாஜக ஆட்சியில் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது.   பல ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு கல்வி உரிமையும் வேலைவாய்ப்பும் மறுக்கப்பட்டு வருகிறது.    இந்த போராட்டத்தின் மூலம் இது போன்ற விவகாரங்கள் நாடெங்கும் தெரிய வரும்.” என தெரிவித்துள்ளார்.