மதவாத சக்தியால் பிளவுபட்டிருக்கும் இந்தியாவை ஒன்றிணைக்க வேண்டி ராகுல் காந்தி துவக்கியுள்ள இந்திய ஒற்றுமை பயணம் 150 நாட்கள் தொடர் பாதயாத்திரையின் 6 வது நாளான இன்று 100 கி.மீட்டரை கடந்துள்ளது,

6 நாள் பயணம் முடிவடைந்த நிலையில், தென்மாநிலங்களை கடந்து வட மாநிலங்களை நெருங்கும் போது இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை உணர்ந்த, மூன்றாவது அணி கனவில் இருக்கும் பாஜக ‘பி’ டீம், மாநில கட்சிகளுக்கு காங்கிரஸ் வழிவிட வேண்டும் என்று அசடுவழியத் தொடங்கியிருக்கிறது.

அதேவேளையில் இன்று இரண்டாவது நாளாக கேரளாவில் பயணம் செய்து வரும் ராகுல் காந்தி அம்மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் பாதையாத்திரை மேற்கொண்டார்.

திருவனந்தபுரத்தில் 100 கி.மீட்டரை கடந்த இடத்தில் ராகுல் காந்திக்கு பிரம்மாண்ட கட் அவுட் வைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் தனது 4 நாள் பயணத்தை நிறைவு செய்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் இந்திய ஒற்றுமை பயணம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.

கடந்த 5 நாட்களில் ராகுல் காந்தி சென்ற இடங்களில் எல்லாம் பலதரப்பட்ட மக்களை சந்தித்து வருகிறார் அவர்கள் அனைவரும் எட்டாண்டு பாஜக ஆட்சியில் சந்தித்து வரும் அவலங்களை கூறி முறையிட்டு வருகின்றனர்.

குறிப்பாக மகளிர், தேசிய ஊரக வேலை செய்யும் மகளிர், மீனவ சமுதாய மகளிர் என அனைவரும் விலைவாசி உயரவு குறித்தும் குறிப்பாக சமையல் எரிவாயு சிலின்டர் விலை உயர்வு குறித்து கவலை தெரிவித்து வருவதாகக் கூறினார்.

மேலும் வெளிநாட்டில் இருந்து வாங்கும் பெட்ரோலிய பொருட்களின் விலை குறைந்துள்ள போதும் மத்திய அரசு தனது விற்பனை விலையை குறைக்க மறுத்து வருவது மக்களை வஞ்சிக்கும் செயல் என்றும் 400 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை தற்போது 1068.50 ரூயாக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொள்ளும் வழித்தடம்… முழு விவரம்…