டெல்லி: இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக மீண்டும் முகுல் ரோகத்கி நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான  முகுல் ரோத்தகி ஏற்கனவே அட்டர்னி ஜெனராக இருந்துள்ளார். இந்த நிலையில், அவரை மீண்டும் நியமிக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவின்  அட்டர்னி ஜெனரலாக இருந்து வரும் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் பதவி விலகியதை அடுத்து, மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியை மத்திய அரசு நியமிக்க உள்ளது .  முகுல் ரோகத்கி  ஏற்கனவே கடந்த  2014-2017 வரை மத்தியஅரசின் அட்டர்னி ஜெனராக பதவி வகித்துள்ளார்.

ரோஹத்கிக்குப் பிறகு ஜூலை 1, 2017 அன்று வேணுகோபால், 15வது ஏ-ஜி (அட்டர்னி ஜெனரல்) யாகப் பொறுப்பேற்றார். 2020 ஆம் ஆண்டு தனது மூன்றாண்டு பதவிக்காலம் முடிவடைந்த போது, 91 வயதான வேணுகோபால், தனது வயதை காரணம் காட்டி பதவியில் இருந்து விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும், மத்திய அரசு அவரை மேலும் ஒரு காலத்திற்கு உயர் பதவியில் தொடருமாறு கேட்டுக் கொண்டது, வேணுகோபால் ஒப்புக்கொண்டார். தற்போது அவரது பதவிக்காலத்தை  மத்தியஅரசு மேலும் ஒரு வருடம் நீட்டிக்க  விரும்பிய நிலையில், அதை ஏற்க வேணுகோபால் மறுத்து விட்டார்.

இதையடுத்து புதிய அட்டர்னி ஜெனராக முகுல் ரோகத்கிiய மீண்டும் நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.