டில்லி

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவு இட்டுள்ளார்.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது.

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் காரணமாகக் கடந்த சில மாதங்களாக விலை உயராமல் இருந்தது.  தேர்தல்கள் முடிந்துள்ளதால் நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை  137 நாட்களுக்குப் பிறகு உயர்த்தப்பட்டது.

இது குறித்து ராகுல் காந்தி டிவிட்டரில்,

”பெட்ரோல்,, டீசல், எரிவாயு விலைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள முழு அடைப்பு விலக்கபடுள்ளது.

இனி அரசு தொடர்ந்து இந்த விலைகளை அதிகரிக்க கடும் முயற்சி எடுக்கும்.

பணவீக்கம் குறித்து நீங்கள் பிரதமரிடம் கேட்டால் அவர் இதற்கும் கைதட்டச் சொல்வார்”

எனப் பதிந்துள்ளார்.