சென்னை:

கில இந்திய காங்கிரஸ் கம்சி  தலைவர்  ராகுல்காந்தி, பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று  தமிழகம் வருகிறார். சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அவர், இன்று மாலை நாகர்கோவிலில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இந்த பொதுக்கூட்டத்தில், திமுக, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக்கட்சி தலைவர்களும் பங்குகொள்கின்றனர்.

ஏற்கனவே ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த திமுக தலைவர் ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணியை அமைத்து உள்ளார்.

இந்த நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடக்கும் ராகுல் காந்தி, கூட்டணி கட்சி தலைவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களுடன் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

ராகுல்காந்தியின் முதல் தேர்தல் பொதுக்கூட்டம் கன்னியாகுமரி மாவட்டதில் இன்று மாலை நடைபெறுகிறது.  இதற்காக நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

ராகுல்காந்தி வருகையை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விழா மேடை அமைக்கும் பணிகளை காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி நேரில் பார்வையிட்டார்.

இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தியுடன், ஸ்டாலின், வீரமணி, கே.பால கிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், வை.கோ ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.